Table of Contents
ரூட் கேணல் பற்றி பயமுறுத்தும் கதைகளை நீங்கள் கேட்டிருந்தால், கவலை வேண்டாம்.
“இந்த டென்டல் நாற்காலியில் உட்கார்வதற்குப் பதிலா காட்டுப் புலியோட சண்டை போடுவேன்” மாதிரி ஜோக்குகள் ஒவ்வொரு முறையும் கேட்டால், சொன்ன எல்லாரம்மிடம் இருந்து பணம் சேமிச்சிருந்தா இப்போ பல டெண்டல் கிளினிக் திறந்திருக்கலாம்!
உண்மை என்னனா, ரூட் கேணல் சிகிச்சை அவ்வளவு பயங்கரமில்லை.
Partha Dental-ல் பெசன்ட் பயத்தோடு வருவார்கள், சிரிப்போடு வெளியே போவார்கள் – காரணம், அவர்கள் கேட்ட பயங்கர கதைகள் எல்லாம் உண்மை இல்லைன்னு புரிஞ்சுக்குவாங்க.
இப்போ வாங்க, சிரிப்போடும் உண்மையோடும் ரூட் கேணல் பற்றிய முதல் 10 தவறான நம்பிக்கைகளை உடைக்கலாம்.
தவறான நம்பிக்கை 1: ரூட் கேணல் சிகிச்சை மிகவும் வலிக்கிறது
இதுதான் எல்லாருக்கும் தெரிந்த பழைய கதை!
உண்மை என்னனா – வலியை உண்டாக்குவது ரூட் கேணல் சிகிச்சை இல்லை, தொற்று (infection) தான்.
பல் உள்ளே இருக்கும் நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதால்தான் வலி வரும்.
ரூட் கனால் அந்த வலியை அழிக்கிறது.
இன்றைய அனஸ்தீசியா மருந்துகளால் சிகிச்சை நேரத்தில் எந்த வலியும் இருக்காது.
பலர் “ஒரு சாதாரண பல் பில்லிங் (filling) மாதிரி தான் இருந்தது”ன்னு சொல்வாங்க. சிலர் சிகிச்சை நடக்கும் போதே தூங்கிவிடுவாங்க!
தவறான நம்பிக்கை 2: ரூட் கேணல் செய்யாமல் பல்லை எடுத்துவிடுவது நல்லது
பல்லை எடுக்கிறதே சீக்கிர தீர்வு மாதிரி தோன்றலாம்.
ஆனா அது, “மொபைல் சார்ஜ் போடாம தூக்கி எறிஞ்சிடலாமே”ன்னு சொல்வது மாதிரி.
உங்கள் இயற்கையான பல்லை முடிந்தவரை பாதுகாப்பது தான் சிறந்த முடிவு.
ஒரு முறை எடுத்த பல் மீண்டும் வராது. அதற்கு பதிலாக செயற்கைப் பல் போடுவது அதிக செலவும், அதிக முயற்சியும் தேவைப்படும்.
சரியாக செய்யப்பட்ட ரூட் கேணல் பல வருடங்கள் – சில நேரம் வாழ்நாள் முழுக்க – நீடிக்கும்.
தவறான நம்பிக்கை 3: ரூட் கேணல் கேன்சர் உண்டாக்குமா? இதை கேட்கும்போது நம்மளுக்கே சிரிப்பு வரும்!
பழைய, தவறாக புரிந்துகொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவான கதை இது.
உண்மை என்னனா –
ரூட் கேணல் மற்றும் கேன்சர் இடையே எந்த தொடர்பும் இல்லை.
ஒரே ஒரு அறிவியல் ஆய்வும் இதை நிரூபிக்கவில்லை.
ரூட் கேணல் உங்களுக்கு சூப்பர் சக்தி கொடுக்காது,
அதே நேரத்தில் கேன்சரும் வரவைக்காது – இதுதான் உண்மை.
தவறான நம்பிக்கை 4: ரூட் கேணல் உடலில் வேறு நோய்களை உண்டாக்குமா?
இந்த வதந்தி இப்பவும் WhatsApp-ல சுத்திக்கிட்டே இருக்கு.
உண்மை என்னனா –
நம்ம உடல் முழுக்க கிருமிகள் இயல்பாகவே இருக்கின்றன.
ரூட் கேணல் சிகிச்சை என்றால்:
- தொற்றை முழுவதுமாக அகற்றுவது
- பல்லை சுத்தம் செய்வது
- அதை முழுமையாக மூடுவது
இதனால் கிருமிகள் பரவாமல் தடுக்கப்படுகின்றன.
அடுத்த முறை “ரூட் கேணல் நோய்களை உண்டாக்கும்”ன்னு மெசேஜ் வந்தா – தயங்காம delete பண்ணுங்க.
Book your consultation today!தவறான நம்பிக்கை 5: ரூட் கேணல் சிகிச்சை மிகவும் செலவானது
இதைக் செலவு என்று பார்க்காமல்,
உங்கள் இயற்கை பல்லில் முதலீடு என்று பாருங்கள்.
பின்னாளில் பல் எடுத்துவிட்டு செயற்கைப் பல் போடுவதற்கான செலவோடு ஒப்பிட்டால்,
ரூட் கேணல் மிகவும் சிக்கனமான தீர்வு.
Partha Dental-ல்:
- செலவுகள் முன்கூட்டியே தெளிவாக சொல்லப்படும்
- எளிய கட்டண விருப்பங்களும் உள்ளன
எல்லாருக்கும் தரமான பல் சிகிச்சை கிடைக்கணும் என்பதே எங்கள் நோக்கம்.
தவறான நம்பிக்கை 6: ரூட் கேணல் சிகிச்சைக்கு , பல முறை வர வேண்டுமா?
இப்போ காலம் மாறிச்சு!
புதிய தொழில்நுட்பம், டிஜிட்டல் ஸ்கேன், மேம்பட்ட கருவிகள் காரணமாக,
பல ரூட் கேணல் சிகிச்சைகள் ஒரே வருகையிலேயே முடிந்து விடுகிறது.
சில நேரம் 1–2 visit தான்.
ஒரு web series episode பார்க்கிற நேரத்துக்கும் குறைவாக கூட முடிஞ்சிடும்!
தவறான நம்பிக்கை 7: வலி இல்லையென்றால் ரூட் கேணல் தேவையில்லை
வலி இல்லாமலேயே தொற்று இருக்க வாய்ப்பு உண்டு.
சில நேரம் நரம்பு முற்றிலும் சேதமடைந்து, வலி தெரியாம போகலாம் –
ஆனா உள்ளே தொற்று மெதுவாக வளர்ந்துகிட்டே இருக்கும்.
அதனால்தான் வழக்கமான dental check-up மற்றும் X-ray மிகவும் முக்கியம்.
தவறான நம்பிக்கை 8: ரூட் கேணல் செய்த பல் “செத்த” பல் ஆகிடுமா?
ரூட் கேணல் செய்யும்போது பாதிக்கப்பட்ட pulp மட்டும் அகற்றப்படுகிறது.
பல்லின் வெளிப்புற கட்டமைப்பு (enamel, dentin) முழுமையாக செயல்படும்.
கிரௌன் (cap) போட்ட பிறகு:
- அந்த பல், மற்ற பற்கள் போலவே கடிக்கும்
- சிரிப்பிலும் வேறுபாடு தெரியாது
தவறான நம்பிக்கை 9: ரூட் கேணல் செய்த பல்லில் மீண்டும் தொற்று வரும்
சரியாக செய்யப்படாவிட்டால் மட்டுமே –
(அது Partha Dental-ல் நடக்கவே நடக்காது 😄)
சரியாக seal செய்யப்பட்டு crown போட்ட பல்,
நல்ல oral hygiene இருந்தால் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்கும்.
தவறான நம்பிக்கை 10: ரூட் கேணல் வயதானவர்களுக்கு மட்டுமே
பல் சொத்தை, விபத்து , ஆழமான cavity –
இவை எந்த வயதிலும் வரலாம்.
குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ரூட் கேணல் தேவைப்படலாம்.
பற்கள் காலத்தோடு தானாக சரியாகிவிடாது – பராமரிப்பு தேவை.
ரூட் கேணல் பற்றிய உண்மை என்ன?
ரூட் கேணல் பற்றிய பயங்கர கதைகள் எல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை அல்லது முழுக்க முழுக்க தவறானவை.
இந்த சிகிச்சை:
- பாதுகாப்பானது
- பயனுள்ளத
- வலி இல்லாதது
Partha Dental போன்ற அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் கையில் இருந்தா,
நீங்க நிம்மதியா உட்கார்ந்து சிகிச்சை எடுத்துக்கலாம்.
இன்றைய இணைய காலத்தில், ஒரு சின்ன பல் பிரச்சனையைக் கூட “பெரிய நோய்”ன்னு நினைச்சு பயப்படுறாங்க.
ஆனா உண்மை பெரும்பாலும் ரொம்ப சிம்பிள் தான்.
ரூட் கனால் பற்றிய தவறான நம்பிக்கைகளை உடைக்க தயாரா?
உங்கள் அருகிலுள்ள Partha Dental Clinic-ல்
இப்போதே அப்பாயின்ட்மென்ட் புக் செய்யுங்கள்.
📞 040 4142 0000
இங்க drill ஆகுறது பல் மட்டும் இல்லை –
தவறான நம்பிக்கைகளும் தான்!
Frequently Asked Questions (FAQs)
இல்லை. அனுபவம் வாய்ந்த மருத்துவர் செய்தால் இது மிகவும் பாதுகாப்பானது.
பொதுவாக 1 அல்லது 2 visit போதும்.
இல்லை. தொற்றை நீக்கும் சிகிச்சை தான்.
இல்லை. அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை.
கடுமையான வலி, நீண்ட நேர sensitivity, வீக்கம், நிறம் மாறுதல் இருந்தால் மருத்துவரை பார்க்க வேண்டும்.
அரிதாக. பெரும்பாலும் சரியான பராமரிப்பு இல்லாததால் தான்.
Dental Questions? We’re here to help!
Disclaimer:
The prices mentioned in this blog are indicative and may vary based on the severity of the condition, the technology used, and materials recommended by the dentist. They are accurate as of the date of publishing and are subject to change based on clinic policy. Third-party or AI-generated estimates may not reflect actual clinic pricing. For accurate cost details, please visit your nearest Partha Dental clinic.